பெங்களூரு

விதான செளதா பகுதியில் 144 தடை உத்தரவு

12th Jul 2019 08:47 AM

ADVERTISEMENT

பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறுவதையொட்டி, விதான செளதா பகுதியில்  வியாழக்கிழமை (ஜூலை 11) முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையர் ஆலோக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரு விதான செளதாவில் உள்ள சட்டப்பேரவையில் ஜூலை 12-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களால் விதான செளதா வளாகத்தில் தர்னா உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெறக்கூடும். இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்படலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு ஜூலை 11-ஆம் தேதி காலை 6 மணி முதல் 14-ஆம் தேதி இரவு 12 மணி வரை விதான செளதாவை சுற்றியுள்ள 2 கி.மீ சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
தடை உத்தரவின் போது அப்பகுதியில் போராட்டம், ஊர்வலம், தர்னாவில் ஈடுபடக் கூடாது. மேலும் ஆயுதங்கள், வெடிபொருள்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT