பெங்களூரு

திரைப்படவியல் பட்டயப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

12th Jul 2019 09:42 AM

ADVERTISEMENT

திரைப்படவியல் மற்றும் ஒலிப்பதிவு பொறியியல் பட்டயப் படிப்புகளில் (டிப்ளமோ)சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2019-20-ஆம் கல்வியாண்டில் கர்நாடகத்தில் செயல்பட்டுவரும் அரசு மற்றும் அரசு மானியம் பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் திரைப்படவியல் மற்றும் ஒலிப்பதிவு பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் கர்நாடகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 50 சதவீத இடங்களும், வெளிமாநில மாணவர்களுக்கு 50 சதவீத இடங்களும் ஒதுக்கப்படுகிறது. 
இப்படிப்பில் சேர்ந்து படிக்க, கர்நாடகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி அடைந்து, அதில் 35 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மற்றும் விவர கையேட்டை  w‌w‌w.‌d‌t‌e.‌k​a‌r.‌n‌i​c.‌i‌nஎன்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவங்களை முதல்வர் அலுவலகம், அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம், ஹெசரகட்டா அஞ்சல், பெங்களூரு-560088 என்ற முகவரியிலோ அல்லது ஆவண சரிபார்ப்பு மையங்களிலோ ஜூலை 15 முதல் 19-ஆம் தேதிக்குள் நேரில் அளிக்கலாம்.
விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களின் நகல்கள், 8 கடவுச்சீட்டு அளவிலான புகைப்படங்களுடன் செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு 080-28466768, 28446672 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT