பெங்களூரு

ஜூலை 14-இல் பாவாணர் பாட்டரங்கம்

12th Jul 2019 08:45 AM

ADVERTISEMENT

பெங்களூரில் ஜூலை 14-ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஐடிஐ தமிழ் மன்றத்தில் 191-ஆவது பாவாணர் பாட்டரங்கம் நடைபெறுகிறது.
இதுகுறித்து அம்மன்றத்தின் பாவாணர் பாட்டரங்கப் பொறுப்பாளர் இராம.இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெங்களூரு தூரவாணிநகரில் உள்ள ஐடிஐ தமிழ்மன்றத்தில் ஜூலை 14-ஆம் தேதி 191-ஆவது பாவாணர் பாட்டரங்கம் நடைபெறுகிறது. அன்று மாலை 3.30 மணியளவில் தொடங்கும் பாட்டரங்கத்துக்கு பெரு.ராமகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். மன்றச்செயலாளர் கு.மாசிலாமணி வரவேற்கிறார். பாட்டரங்கப் பொறுப்பாளர் இராம.இளங்கோவன் அறிமுக உரை ஆற்றுகிறார். 
"தீவினையை எரிக்கும் தீப்பொறி' என்ற தலைப்பிலான பாட்டரங்கில் பாவலர்கள் பலர் பங்கு கொண்டு கவிதை பாடுகின்றனர். இதைத் தொடர்ந்து, உடனடி கவிதைப்போட்டி நடத்தப்பட்டு, சிறந்த கவிதைகளுக்கு புத்தக பரிசு, ஊக்கப்பரிசுகள் வழங்கப்படும். பிறந்த நாள் காணும் கவிஞர்கள் பெ.கமலநாதன், மு.குமார், இரா.லாலாலஜபதி, தே.சந்தோஷ்குமார், லயோலா, துரை பாண்டியமூர்த்தி ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்படும். நிகழ்ச்சியில் மன்ற உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என அதில் கேட்டுக்
கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT