பெங்களூரு

"கண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அவசியம்'

4th Jul 2019 09:55 AM

ADVERTISEMENT

கண்களைப் பாதுகாப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்று அகர்வால் கண் மருத்துவமனை கண்புரை, விழித்திரை வல்லுநர் முரளிதராகிருஷ்ணா தெரிவித்தார்.
பெங்களூரில் புதன்க்கிழமை கண் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு அவர் பேசியது: இந்தியாவில் அலட்சியத்தால் பலர் கண் பார்வையை இழக்க நேரிடுகிறது. உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றாகத் திகழும் கண்களைக் கூடுதல் விழிப்புணர்வோடு பாதுகாக்க வேண்டும்.
கண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பாதுகாக்க வேண்டும். கண்களில் பிரச்னை என்றால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும். ஆரம்பக்கட்டத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால், கண்களைப் பாதுகாக்க முடியும். தற்போது கண் பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் இந்தியா முன்னிலையில் உள்ளது. வெளிநாடுகளிலிருந்து கண் சிகிச்சைப் பெற பலர் இந்தியாவுக்கு வருகின்றனர். கண் தானம் குறித்து அரசு மட்டுமின்றி, தனியார்களும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் கண் மருத்துவர்கள் ரவி, ரகுநாகராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT