பெங்களூரு

இன்று குடிநீர் குறைதீர் முகாம்

4th Jul 2019 10:04 AM

ADVERTISEMENT

நகர வடக்கு முதலாம் துணைமண்டலத்தில் வியாழக்கிழமை குடிநீர் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
வடக்கு முதலாம் துணைமண்டலத்தில் உள்ள எம்.இ.ஐ லேஅவுட், சோலதேவனஹள்ளி, பாகுபலி நகர் மற்றும் அதை சுற்றுயுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் 11 மணிவரை குடிநீர் குறைதீர்ப்பு முகாம் துணை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. தண்ணீர் ரசீது, குடிநீர் விநியோகத் தாமதம், கழிவுநீர் இணைப்பு மற்றும் வியாபார இணைப்புகள் குடியிருப்பு இணைப்புகளாக மாற்றுவது போன்ற குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இது குறித்து மேலும் தகவல் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்- 28371048. 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT