நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, அகில கர்நாடக மாநில தலைமை டாக்டர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழைகள், மாணவர்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
பெங்களூரு ஸ்ரீராமபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு, இயக்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.எம்.ராஜா தலைமை வகித்தார். விழாவில் அகில இந்திய தலைமை விஜய் மக்கள் இயக்கப் பொறுப்பாளரும், புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏவுமான புஸ்ஸி என்.ஆனந்த், கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தினேஷ் குண்டுராவ், மக்கள் இயக்க மாநிலத் துணைத் தலைவர் கில்லி சரத், செயலர் ஜில்லா ஜெகன், துணைச்செயலாளர் ஃபிளவர் சீனு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் ஏழை பெண்களுக்கு சேலைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கரநாற்காலிகள், பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பை, நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, கதிர், நவீன் ஆகியோரின் இசைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நடிகர் விஜய் திரைப்படங்களின் பாடல்கள் பாடப்பட்டன. நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான விஜய் ரசிகர்கள் கலந்துகொண்டனர்.