ஆட்டோக்களை கள்ளச்சாவி போட்டு திருடி ஓட்டிவந்ததாக, இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு சாம்ராஜ்பேட்டையைச் சேர்ந்தவர் சந்துரு (26). இவர் இரவு நேரங்களில் சாலையோரங்களில் நிறுத்தியுள்ள ஆட்டோக்களை கள்ளச்சாவியைப் பயன்படுத்தி, திருடிச் செல்வாராம். இந்த ஆட்டோக்களில் பயணிகளைச் ஏற்றிச் சென்று சம்பாதித்த பின்னர் விடிந்ததும், ஆட்டோக்களை சாலையோரங்களில் நிறுத்திவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தாராம்.
இதுகுறித்து வழக்கு பதிந்த சாம்ராஜ்பேட்டை போலீஸார், சந்துருவைக் கைது செய்தனர். இவரிடம் இருந்து 6 ஆட்டோக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.