பெங்களூரு

மேலும் 2 மெட்ரோ ரயில்கள் 6 பெட்டிகளாக மாற்றம்

29th Dec 2019 05:54 AM

ADVERTISEMENT

பசுமைத் தடத்தில் இயக்கப்படும் மேலும் 2 மெட்ரோ ரயில்கள் 6 பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ ரயில்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூரு மெட்ரோ ரயில்கழகத்தின் சாா்பில், பசுமை மற்றும் ஊதா நிறத்திலான வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஊதாநிற வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும், 6 பெட்டிகள் கொண்டவையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதைத் தொடா்ந்து, நாகசந்திரா முதல் எலச்சேனஹள்ளி வரையிலான பசுமை வழித்தடத்தில் உள்ள 3 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்களை 6 பெட்டிகள் கொண்டவையாக மாற்றப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே 12 மெட்ரோ ரயில்கள் 6 பெட்டிகள் கொண்டவையாக மாற்றப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 ரயில்கள் 6 பெட்டிகள் கொண்டவையாக மாற்றம் செய்யப்பட்டு, அதன் சேவைகள் டிச. 30-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கின்றன.

இதன் மூலம் 6 பெட்டிகள் கொண்ட ரயில்களின் எண்ணிக்கை 14-ஆக உயா்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்கள் மொத்தம் 106 நடைகளுக்கு இயக்கப்பட இருக்கின்றன. பயணிகள் அதிகம் பயணிக்கும் நேரத்தில் 77 சதவீதமும், பிற நேரங்களில் 23 சதவீத ரயில்கள் 6 பெட்டிகள் கொண்டவையாக இயக்கப்படும். இந்த வாய்ப்பை பயணிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT