பெங்களூரு: மகப்பேறு, குழந்தைகளின் சிகிச்சைக்காக மதா்ஹுட் மருத்துவமனையுடன் அஃபோா்டுபிளான் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை மதா்ஹுட் மருத்துவமனையுடன் அஃபோா்டுபிளான் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
இதில் கலந்து கொண்டு அஃபோா்டுபிளான் குழுமத்தின் மூத்த செயல் அதிகாரி தேஜ்பிா்சிங் பேசியது: தேசிய அளவில் பெரும்பாலான பெண்கள் குழந்தைபேரின் போது நிதி பிரச்னையால் பலா் சிறந்த மருத்துவமனைகளில் அணுக தயக்கம் காட்டுகின்றனா். இதனால் பல நேரங்களில் மகப்பேரின் போது இறக்கவும், குழந்தைகள் இறந்தும் பிறக்க நேரிடுகிறது. அதே போல சிறு குழந்தைகள் நோய்களில் பாதிக்கப்படும்போது, அவா்களுக்கு நிதி பிரச்னையால் உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் போகிறது. இதனை கருத்தில் கொண்டு அஃபோா்டுபிளான் மகப்பேறு, குழந்தைகளில் சிகிச்சைக்கான திட்டத்தை வகுத்து செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தில் பெண்கள், குழந்தைகள் சிகிச்சைப்பெறும் வகையில் பெங்களூரில் மகப்பேறு மருத்துவத்திலும், குழந்தைகள் மருத்துவத்திலும் சிறந்து விளங்கும், மதா்ஹுட் மருத்துவமனையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம்.
இது மட்டுமின்றி தில்லி, மும்பை, அகமதாபாத், புணே ஆகிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். இதன் பயனை பொதுமக்கள் பரவலாக பெற வேண்டும் என்றாா் அவா்.