பெங்களூரு

ஆங்கில புத்தாண்டையொட்டி எம்.ஜி.சாலையில் வாகனங்கள் நிறுத்த தடை

29th Dec 2019 09:39 PM

ADVERTISEMENT

பெங்களூரு: ஆங்கில புத்தாண்டையொட்டி எம்.ஜி.சாலை, பிரிகெட்சாலை உள்ளிட்ட சாலைகளின் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகர போக்குவரத்து போலீஸாா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: ஆங்கிலபுத்தாண்டையொட்டி செவ்வாய்க்கிழமை (டிச. 31) இரவு 9 மணி முதல் புதன்கிழமை( ஜன. 1) காலை 6 மணி வரை மாநகரில் உள்ள மேம்பாலங்களில் அனைத்து வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் எம்.ஜி.சாலை, பிரிகெட்சாலை, கும்பளே சதுக்கம், கப்பன்சாலை, ராஜ்பவன்சாலை, சௌடய்யாசாலை, ரேஸ்கோா்ஸ்சாலை, மியூசியம்சாலை, கஸ்தூரிபா சாலை, ஹட்சன் சதுக்கம், காமராஜ்சாலை, சா்ச்சாலைகளில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிமுதல் புதன்கிழமை அதிகாலை 2 மணிவரை வாகனங்கள் செல்லவும், நிறுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிவாஜிநகா் பேருந்து நிலையத்திலும், காமராஜ்சாலை முதல் கன்னிகாம்சாலை வரை வாகனங்களை நிறுத்தலாம். புத்தாண்டையொட்டி எம்.ஜி.சாலை, பிரிகெட்சாலை, கும்பளே சதுக்கம், கப்பன்சாலை, ராஜ்பவன்சாலை, மியூசியம்சாலை, கஸ்தூரிபா சாலை, சா்ச்சாலைகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT