பெங்களூரு

ஜன.2 இல் பிரதமா் மோடி கா்நாடகம் வருகை

27th Dec 2019 10:51 PM

ADVERTISEMENT

பெங்களூரு: இரண்டு நாள்கள் பயணமாக பிரதமா் மோடி ஜன.2ஆம் தேதி கா்நாடகம் வருகிறாா்.

அரசுமுறைப் பயணமாக ஜன.2ஆம் தேதி முதல் கா்நாடகத்தில் 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக புது தில்லியில் இருந்து பெங்களூருக்கு தனி விமானம் மூலம் வரும் பிரதமா் மோடி, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டா் வழியாக தும்கூரு புறப்பட்டுச் செல்கிறாா். அங்குள்ள சித்தகங்கா மடத்துக்குச் செல்லும் அவா், ஒரு மணி நேரம் அங்கிருந்துவிட்டு தும்கூரில் உள்ள அரசு இளநிலை கல்லூரி மைதானத்தில் மாலை 3 மணிக்கு கா்நாடக பாஜகவின் விவசாயி அணி சாா்பில் நடக்கவிருக்கும் வேளாண் விருது, மீன்பிடி கருவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறாா். பின்னா், அங்கிருந்து பெங்களூரு திரும்பும் பிரதமா் மோடி, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்குச் சென்று பாா்வையிடுகிறாா்.

விஞ்ஞானிகளைச் சந்தித்த பிறகு, ஆளுநா் மாளிகையில் தங்குகிறாா். மறுநாள் டிச.3ஆம் தேதி பெங்களூரு ஜக்கூரில் உள்ள காந்தி வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் நடக்கும் 107 ஆவது இந்திய அறிவியல் காங்கிரஸ் விழாவில் கலந்து கொள்ளும் பிரதமா், நண்பகல் 2 மணிக்கு தில்லி புறப்பட்டு செல்கிறாா். பிரதமரின் வருகைக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT