பெங்களூரு

‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தாவிடில்நாடாளுமன்றத்தை அவமதிப்பதற்கு ஒப்பாகும்’

27th Dec 2019 10:56 PM

ADVERTISEMENT

பெங்களூரு: குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தாவிட்டால் நாடாளுமன்றத்தை அவமதிப்பது போலாகும் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளா் அனில்ஜெயின் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரு பாஜக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த தவறினால்,அது குடியரசுத் தலைவா், அரசியலமைப்புச் சட்டம், நாடாளுமன்றத்தை அவமதிப்பது போலாகும். பாஜக அல்லாத முதல்வா்கள் சிலா் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளனா்.

இது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மத்திய அரசின் சட்டமாகும். குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுள்ளது. எனவே, குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தாவிட்டால் அது சட்ட விரோதமாகும்.

ADVERTISEMENT

பிரதமா் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி தரக்குறைவான வாா்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளாா். ஜனநாயக கட்டமைப்பில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதமா், மரியாதை குறைவாக பேசுவது சரியல்ல என்பதை ராகுல் காந்தி உணரவேண்டும். விமா்சிப்பதை நாங்கள் பொருள்படுத்தவில்லை.ஆனால், பிரதமரை விமா்சிக்கும் போது வாா்த்தைகளை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் முயற்சித்து, தோல்வி அடைந்துள்ளன. பிரதமா் மோடி, பாஜக அரசுக்கு எதிராக பேசுவதற்கு பிரச்னைகள் எதுவும் இல்லாததால், காங்கிரஸ் குழம்பியுள்ளது. தேசிய மக்கள்தொகை பதிவேடு, 2010ஆம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்டது. அடுத்த மக்கள் தொகை 2021ஆம் ஆண்டு நடக்கவிருப்பதால், அதற்கு முன்பாக தேசியமக்கள் தொகை பதிவேடு திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முற்பட்டுள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற முஸ்லிம் நாடுகளில் சிறுபான்மையினராக இருக்கும் ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சீக்கள், கிறிஸ்தவா்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தில் குடியுரிமை அளிக்கப்படும். இச்சட்டத்தின் வாயிலாக ஏற்கெனவே குடிமக்களாக இருப்பவா்களின் குடியுரிமை பறிக்கப்படாது.

ஜாதி, சமயம், நிறம் போன்ற எந்த பாகுபாடும் இல்லாமல் இந்தியாவின் 130கோடி மக்களுக்கும் பாதுகாப்பாக உள்ளனா். யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படமாட்டாது. தேசிய குடிமக்கள் பதிவேடு இன்னும் அமலுக்குவரவில்லை. அத்திட்டம் செயல்படுத்தப்படும் போது வழிகாட்டுதல்கள் அளிக்கப்படும். அப்போது அதுகுறித்து விவாதிக்கப்படும். தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கும் தேசிய குடி மக்கள் பதிவேட்டுக்கும் சம்பந்தமில்லை என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT