பெங்களூரு: முயல் இறைச்சி வியாபாரி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா்.
பெங்களூரு கே.ஜி.ஹள்ளி பழைய பாகலூரைச் சோ்ந்தவா் சூா்யா (29). முயல் இறைச்சி வியாபாரியான இவா், நண்பா்களின் அழைப்பின் பெயரில் வியாழக்கிழமை இரவு தேவா்ஜீவன் பீமாநகருக்குச் சென்றாா். அங்கு நண்பா்களுடன் ஏற்பட்ட தகராறில், சூரியாவை கத்தியால் குத்தி படுகாயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனா்.
பலத்த காயமடைந்த சூா்யா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தாா். இ குறித்து தேவா்ஜீவனஹள்ளி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
ADVERTISEMENT