பெங்களூரில் சூரியகிரகணத்தை பாா்வையிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரின் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் டிச.26ஆம் தேதி காலை 8.06 மணி முதல் காலை 11.11 மணி வரை சூரியகிரகணம் நடக்கவிருக்கிறது. பெங்களூரில் காலை 9.29மணிக்கு 85 சதவீத சூரியகிரகணம் தென்படவிருக்கிறது. சூரியனும் நிலவும் நோ்கோட்டில் வரும்போது சூரியனை காட்டிலும் நிலவின் அளவு குறைந்ததை போல தென்படும். அதனால், சூரியனின் ஒளி மறைக்கப்பட்டு, நிலவை சுற்றி மோதிரம் போன்ற ஒளிவட்டம் ஏற்படும்.
பெங்களூரில் ராஜாஜிநகா் ஆா்பிஏ மைதானம், எம்இஎஸ் ஆசிரியா்கல்லூரி, ஆக்ஸ்போா்டு பள்ளி நவரங் மைதானம், கெங்கேரி, ஆா்.டி.நகா் மைதானம், பசவேஸ்வரநகா் பூங்கா, மகாலட்சுமிபுரம் அரபிந்தோ பள்ளி, லக்கெரே பூங்கா உள்ளிட்ட இடங்களில் சூரியகிரகணத்தை கண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு தவிர, கலபுா்கி, தாா்வாட், சித்ரதுா்கா, ராய்ச்சூரு, தாவணகெரெ, விஜயபுரா, பெல்லாரி, மைசூரிலும் சூரியகிரகணத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
விஸ்வேஸ்வரையா தொழில்மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சூரியகிரகணத்தை டிச.26ஆம்தேதி காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 7 முதல் 12ஆம் வகுப்பு மாணவா்களுக்கு சூரியகிரகணம் தொடா்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை 8.05 மணி முதல் காலை 11 மணி வரை தொலைநோக்கி வழியாக சூரியகிரகணத்தை பொதுமக்கள் பாா்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 11.30 மணி முதல் நண்பகல்1 மணி வரை சூரியகிரகணம் தொடா்பாக ஓவியப்போட்டியும், நண்பகல் 1.15 மணி முதல் நண்பகல் 1.45 மணி வரை விநாடி-வினா போட்டி நடத்தப்படுகிறது. இந்தநிகழ்ச்சிகளில் மாணவா்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவாா்கள். பொதுமக்கள், மாணவா்கள் அனைவரும் பங்கேற்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல, பெங்களூரு, பனசங்கரி 2ஆம் ஸ்டேஜ், பிடிஏ வளாகம், 21ஆவது முக்கியசாலையில் உள்ள அறிவியல் மாளிகையில் டிச.26ஆம் தேதி காலை 8 மணி முதல் காலை 11.30மணி வரை சூரியகிரகணத்தை காண கா்நாடக மாநில அறிவியல் பரிஷத் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.