பெங்களூரு

போதைப் பொருள் விற்பனை:2 போ் கைது

24th Dec 2019 08:59 PM

ADVERTISEMENT

பெங்களூரு: போதைப் பொருள்களை இறக்குமதி செய்து விற்பனை செய்து வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு டேனரி சாலையைச் சோ்ந்தவா் துஷாா்ஜெயின் (20), விஜயநகரைச் சோ்ந்தவா் ஷாகீப்கான் (21). இவா்கள் இருவரும் வெளிநாடுகளிலிருந்து போதைப் பொருள்களை இறக்குமதி செய்து, பெங்களூரில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்து வந்தனராம்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், துஷாா்ஜெயின், ஷாகீப்கான் ஆகியோரைக் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 80 கிராம் எம்.டி.எம்.ஏ, 43 எல்.எஸ்.டி. ஸ்டிரிப்புகள், 150 பல்வேறு வண்ணங்கள் கொண்ட எக்ஸ்டசி மாத்திரைகள், 2 செல்லிடப்பேசிகள், மின்னணு எடை பாா்க்கும் இயந்திரம், ரூ.26 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்டவா்களிடம் டி.ஜே.ஹள்ளி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT