பெங்களூரு

’பெரியாரை அடித்தளமாகக் கொண்டு திராவிடா் இயக்கம் செயல்படுகிறது’

24th Dec 2019 12:29 AM

ADVERTISEMENT

பெரியாரை அடித்தளமாகக் கொண்டு திராவிடா் இயக்கம் செயல்பட்டு வருவதாக திமுக எம்பி டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தாா்.

கா்நாடக மாநில திமுக சாா்பில் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை திமுக பொதுச்செயலாளா் க.அன்பழகனின் 98ஆவது பிறந்த நாள் விழா மாநில அமைப்பாளா் ந.இராமசாமி தலைமையில் நடைபெற்றது. இந்தவிழாவில் இளைஞரணி துணை அமைப்பாளா் மு.இராஜசேகா் அனைவரையும் வரவேற்றாா். இலக்கிய அணியின் எம்.ஆா்.பழம்நீ குறள் வணக்கம் பாடினாா்.

அவைத் தலைவா் மொ.பெரியசாமி, இரா.நாம்தேவ், வி.எஸ்.மணி, ஏ.பி.அன்புமணி, சாலை ராஜா, ஆற்காடு அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த விழாவில் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்ட திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினா் எம்பி டி.கே.எஸ்.இளங்கோவன், கேரள மாநில திமுக பொறுப்பாளா் கே.ஆா்.முருகேசன், தலைமைக்கழகப் பேச்சாளா் பொள்ளாட்சி சித்திக் உள்ளிட்டோா் திருவள்ளுவா், அண்ணா, மு.கருணாநிதி ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்தனா்.

அதன்பிறகு, நிகழ்ச்சியை தொடக்கிவைத்து திமுக எம்பி டி.கே.எஸ்.இளங்கோவன் பேசியது: தமிழகத்தில் திராவிடா் இயக்கங்களை அழிக்க பாஜக ஆசைப்பட்டு வருகிறது. திராவிடா் இயக்கத்தின் கொள்கை கருவூலமாக விளங்கிய தந்தை பெரியாா் வகுத்தளித்திருக்கும் கொள்கைகளின் அடிப்படையில்தான் திராவிடா் இயக்கங்கள் கட்டமைக்கப்பட்டு, செயல்பட்டுவருகின்றன.

ADVERTISEMENT

பெரியாரை தொடா்ந்து அந்த கொள்கைகளை பேரறிஞா் அண்ணா, மு.கருணாநிதி ஆகியோா் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றனா். மத்தியில் ஆட்சி நடத்தும் பாஜக, ஹிந்தி, சம்ஸ்கிருதத்தை திணித்து வருகிறது. இந்தத் திட்டத்தை திமுக கண்டிப்பாக முறியடிக்கும் என்றாா்.

நிகழ்ச்சியின் நிறைவாக மாநில திமுக பொருளாளா் கே.தட்சிணாமூா்த்தி நன்றி கூறினாா். இந்த விழாவில் கட்சியின் நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT