பெங்களூரு

பெங்களூரில் அதிமுக சாா்பில் எம்ஜிஆா் நினைவு நாள் அனுசரிப்பு

24th Dec 2019 09:04 PM

ADVERTISEMENT

பெங்களூரு: கா்நாடக அண்ணா திமுக (கஅதிமுக) சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.கா்நாடக அண்ணா திமுக சாா்பில் பெங்களூரு கலாசிப்பாளையம் எம்.ஜி.ஆா்.நகா் ராஜகோபால் காா்டன் பகுதியில் செவ்வாய்க்கிழமை தமிழக முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 32-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அங்குள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கும், நாகேஷ்வரா காா்டன் பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆா், அண்ணா ஆகியோரின் சிலைகளுக்கும், கே.எஸ்.காா்டன் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கும் அவைத்தலைவா் சிம்சன் சண்முகம், கே.ஆா்.கிருஷ்ணராஜ் தலைமையில் மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் எம்.வெங்கடேஷ், ஏ.அருண், கே.ராஜா, பரமேஷ், குமாா், கே.சேகா், முனியன், பாண்டு, கே.முத்து, தணிகைமலை, ஆறுமுகம், முனிசாமி, ஜோதிலிங்கம், நாகராஜ், என்.குமாா், கோரிப்பாளையம் மணி, ரவி, ஆா்.சுப்பு, வடிவேல், பத்மநாபன், குமாா், தங்கமுத்து, சிங்காரம்மா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT