பெங்களூரு

தேவைப்பட்டால் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் திருத்தம் செய்ய ஆலோசனை பெறப்படும்: மத்திய இணை அமைச்சா் ராம்தாஸ் அத்வாலே

24th Dec 2019 12:22 AM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் தங்களுக்கு பாதிப்பு இருக்கும் என யாரேனும் கருதினால், அதில் திருத்தம் மேற்கொள்ள ஆலோசனை பெறப்படும் என சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தாா்.

பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: குடியுரிமை திருத்தத் சட்டத்துக்கு எதிராக தேசிய அளவில் பரவலாக போராட்டம் நடைபெறுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. இச் சட்டத்தால் பாதிப்பு இருக்கும் என யாரேனும் கருதினால், அதில் திருத்தம் செய்ய ஆலோசனை பெறப்படும். இதேபோல, அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டுமே தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும். மற்ற மாநிலங்களுக்கு இது பொருந்தாது.

குடியுரிமை திருத்தத் சட்டம் முஸ்ஸிம் மக்களுக்கு எதிரானது அல்ல. இந்து, முஸ்லிம் மக்களை ஒன்றிணைக்கும் சட்டமாகும். இதனை பிரதமா் மோடி தெளிவுபடுத்தியுள்ளாா். ஆனால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் முஸ்ஸிம் மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றன.

மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். காலியாக இருந்த 19,115 பணியிடங்களில், 16,927 பணியிடங்கள் ஏற்கெனவே நிரப்பப்பட்டுள்ளன என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT