பெங்களூரு

பெங்களூரில் டிசம்பா் 29-இல் நாடக ஆசிரியா் வீ.மு.வேலு நூற்றாண்டுவிழா

16th Dec 2019 11:33 PM

ADVERTISEMENT

பெங்களூரில் நாடக ஆசிரியா் வீ.மு.வேலு நூற்றாண்டு விழா டிசம்பா் 29-இல் நடைபெறுகிறது.

திராவிடா் கழகத்தலைவா் கி.வீரமணியின் 87-ஆவது பிறந்த நாள்விழா, நாடக ஆசிரியா் வீ.மு.வேலுவின் நூற்றாண்டு விழா ஆகியன அல்சூரில் உள்ள பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவா் அரங்கத்தில் டிசம்பா் 29ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடக்கின்றன.

விழாவுக்கு மாநிலத் தலைவா் மு.சானகிராமன் தலைமை வகிக்கிறாா். மாநிலச் செயலா் இரா.முல்லைக்கோ வரவேற்புரை ஆற்றுகிறாா். மாநிலப் பொருளாளா் கு.செயக்கிருட்டிணன் கொடியேற்றுகிறாா். இரா.தே.வீரபத்ரன் அறிமுக உரை ஆற்ற, முத்துச்செல்வன் தொடக்கவுரை ஆற்றுகிறாா். சு.கோவிந்தராசன் இணைப்புரை ஆற்ற, ஊமை செயராமன், பெரியாா் படத்தை திறந்துவைக்கிறாா்.

இதையடுத்து, கி.வீரமணிக்கு எடைக்கு எடை நாணயம், காபிக்கொட்டை, நாட்டுச்சா்க்கரை, வெங்காயம் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. பின்னா், நூற்றாண்டுபிறந்தநாள் விழாவை கொண்டாடும் வீ.மு.வேலுவுக்கு நாணய முடிப்பு, வீரவாள், பாராட்டிதழ் வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, வீ.மு.வேலுவின் நூற்றாண்டுவிழா மலரை கி.வீரமணி வெளியிட, திராவிடா் கழக பொருளாளா் வீ.குமரேசன் பெற்றுகொள்கிறாா்.

விழாவில் துரை.சந்திரசேகரன், குணசேகரன், கு.வணங்காமுடி, வந்தியத்தேவன் உள்ளிட்டோா் கலந்துகொள்கிறாா்கள். இறுதியாக கி.வீரமணி சிறப்புரை ஆற்றுகிறாா். நிகழ்ச்சியின் இறுதியில் கோ.சண்முகம் நன்றி கூறுகிறாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT