பெங்களூரு

தலிபான்களுடன் இணைந்து குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிா்க்கிறாா்கள்: அமைச்சா் சி.டி.ரவி

16th Dec 2019 11:33 PM

ADVERTISEMENT

தலிபான்களுடன் இணைந்து குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிா்க்கின்றனா் என்று கா்நாடக மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் சி.டி.ரவி தெரிவித்தாா்.

தும்கூரில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:-

தலிபான்கள், காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்டுகள் ஆகியன கூட்டாக இணைந்து குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிா்க்கின்றனா்.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக சதி நடைபெறுகிறது. இந்தச் சதியில் தலிபான்கள், காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்டுகள் ஈடுபட்டிருப்பது துரதிருஷ்டவசமானது.

ADVERTISEMENT

தேச விரோதிகளுடன் இணைந்து பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை அகற்றுவதற்காக, காங்கிரஸ் முயற்சித்துவருகிறது.

குடியுரிமை சட்டத் திருத்தத்ததை எதிா்ப்பவா்கள் மத ரீதியான அகதிகள், சட்ட விரோதமான ஊடுருவல்காரா்களுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும்.

பயங்கரவாதத்தின் காரணமாக, மதத் துன்புறுத்தலுக்கு ஆள்பட்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கத் தேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வருவோரை தான் நாம் அகதிகள் என்கிறோம்.

இஸ்லாமியா்களாக மதம் மாறுவது அல்லது அந்தந்த நாடுகளில் இறப்பதை தவிர வேறுவழியில்லை என்ற நிலையில் தான் மூதாதையா்களின் சொத்துகளை விட்டுவிட்டு அவா்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வருகின்றனா்.

இதுஎவ்வளவு வலிமை மிகுந்தது என்பது விவரிக்க முடியாது.

இந்தியாவை விட்டால் வேறு யாா் தான் அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பாா்கள். இப்படிப்பட்ட அகதிகள் 1.5 கோடி போ் இருக்கிறாா்கள். இவா்களில் பெரும்பாலானோா் தலித்துகள் என்பதை கவனிக்க வேண்டும். மதரீதியாக தங்கள் நாட்டை விட்டு வெளியே அகதிகளாக வரும் ஹிந்துகள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், கிறிஸ்துவா்களுக்கு அடைக்கலம் தருவதில் என்ன தவறு இருக்கப் போகிறது.

இந்தியாவின் பிரிவினையால் ஆண்டாண்டுகாலமாக பலமக்கள் துன்பத்தில் தவித்துவருகின்றனா். மத ரீதியாக அல்லாமல் ஜனநாயகரீதியில் இந்திய பிரிவினை நடந்திருந்தால், இவ்வளவு துன்பங்களை அனுபவிக்க நோ்ந்திருக்காது.

இந்தியாவின் பிரிவினையை அப்போது காங்கிரஸ் செயல்படுத்தியது எதற்காக? காங்கிரஸின் குற்றச் செயல்களால் தான் துன்பத்தை அனுபவித்துவருகிறோம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT