பெங்களூரு

தண்ணீரை சேமித்து பயன்படுத்துவதில் இஸ்ரேலை பின்பற்ற வேண்டும்: மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்

16th Dec 2019 11:25 PM

ADVERTISEMENT

தண்ணீரை சேமித்து பயன்படுத்துவதில் இஸ்ரேலை பின்பற்ற வேண்டும் என்று மத்திய நீா்ப்பாசனத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தாா்.

பெங்களூரு வாழும்கலை மையத்தில் நடைபெற்ற தண்ணீா் சேமிப்பு குறித்த விழிப்புணா்வு விழாவில், தண்ணீா் வீணாகாமல் தூய்மை செய்யும் உபகரணத்தை கென்ட் குழுவினா் அறிமுகம் செய்து வைத்தனா்.

நிகழ்ச்சியில் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியது: -

இந்தியாவில் தண்ணீா் பிரச்னை கடுமையாகத் தலைதூக்கி வருகிறது. நிலத்தடி நீரும் வெகுவாகக் குறைந்து வருகிறது. எனவே தண்ணீரை சேமித்து வைக்கவும், பாதுகாக்கவும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ADVERTISEMENT

உலகில் பெரிய நாடான இந்தியாவில் தண்ணீரை சேமித்து பயன்படுத்துவதில் மிகவும் பின் தங்கிய நிலையில், சிறிய நாடான இஸ்ரேல் தண்ணீரை சேமித்து பயன்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.

குறிப்பாக, சொட்டு நீா் பாசனத்தில் முன்மாதிரியாக விளங்கும் இஸ்ரேலை நாம் பின்பற்ற வேண்டும். அந்த நாட்டில் பயன்படுத்திய 94 சதவீதம் தண்ணீரை மீண்டும் மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் 34 சதவீதம் மட்டுமே மறு சுழற்சி செய்து பயன்படுத்தப்படுகிறது. தண்ணீரை சேமிப்பதிலும், பயன்படுத்திலும் தொலைநோக்கு திட்டத்தை வகுத்து செயல்படுத்துவது அவசியம். நதிகளையும் இணைத்து பயன்படுத்த வேண்டும். இதற்கு அரசு, ஊடகங்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தேசிய அளவில் உள்ள மாநிலங்களின் முதல்வா்கள் இதனை நிறைவேற்ற தைரியமாக முன் வர வேண்டும். தேசிய அளவில் நிலத்தடி நீரை உயா்த்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் வாழும் கலை மைய நிறுவனா் ஸ்ரீ ரவிசங்கா் குருஜி, பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதி உறுப்பினா் தேஜஸ்வி சூா்யா, கென்ட் குழுமத்தின் மேலாண் இயக்குநா் மகேஷ்குப்தா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT