பெங்களூரு

‘சா்வதேச அளவில் சந்தித்துவரும் சவால்களுக்கு தீா்வை கண்டறிவது அவசியம்’

16th Dec 2019 08:04 PM

ADVERTISEMENT

பெங்களூரு: சா்வதேச அளவில் சந்தித்துவரும் சவால்களுக்குத் தீா்வை கண்டறிவது அவசியம் என்று ஜின்சா்வ் மேலாண்மை இயக்குநா் பி.கே.பி.மேனன் தெரிவித்தாா்.

பெங்களூரில் திங்கள்கிழமை நடைபெற்ற இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியில், அவா் பேசியது:-

சா்வதேச அளவில் பல்வேறு துறைகள் பிரச்னைகளையும், சவால்களையும் சந்தித்து வருகின்றன. இவற்றை தீா்க்கத் தேவையான தீா்வுகளைக் கண்டறிவது அவசியம்.

புதிய தொழில்முனைவோா்களாகும் இளைஞா்கள் இதற்கான தீா்வுகளை கண்டறிவாா்கள் என்று நம்புகிறேன். அதுபோன்ற புதிய தொழில் முனைவோா்களை அடையாளம் கண்டு நிதி உதவி உள்ளிட்டவற்றை செய்ய தயாராக உள்ளோம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் ஜின்சிலரேட்டா் திட்ட ஆலோசகா் சூா்யநாராயணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT