பெங்களூரு

பெங்களூரு மத்திய பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைப்பாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

14th Dec 2019 09:54 AM

ADVERTISEMENT

பெங்களூரு மத்திய பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைப்பாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து பெங்களூரு மத்திய பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு மத்திய பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம், தொழில்நுட்பம், நகா்ப்புறப்படிப்பு மற்றும் திட்டமிடல், கலை மற்றும் அழகியல், சட்டம் மற்றும் பொதுகொள்கை போன்ற முதுநிலை துறைகளில் ஒருங்கிணைப்பாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பாடம் நடத்துவது, ஆராய்ச்சியில் ஈடுபடுவது, தொழிலக அனுபவத்துடன் முதுநிலைப் பட்டப்படிப்பை 55 சதவீதம் மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றுள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இப்பணியில் சேர விரும்புவோா் மின்னஞ்சலில் சுயவிவரத்தை அனுப்பிவைக்கலாம். தகுந்த ஆவணங்களோடு பதிவாளா், பெங்களூரு மத்திய பல்கலைக்கழகம், பெங்களூரு 560001 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பிவைக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT