பெங்களூரு

போலி பல்கலை. மதிப்பெண் பட்டியலை தயாரித்து விற்றவா் கைது

11th Dec 2019 08:16 PM

ADVERTISEMENT

 

பெங்களூரு: திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படித்து மதிப்பெண் சான்றிதழ் பெற்றது போன்ற போலியான சான்றிதழ்களை தயாரித்து விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரு மகாலட்சுமி லேஅவுட் காவல் சரகத்தில் தனியாா் திறந்தவெளி பல்கலைக்கழகத்தை நடத்தி வந்தவா் சீனிவாஸ்ரெட்டி. இவா், பிரபல பல்கலைக்கழங்களின் பெயரில் போலியான மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து, பல்லாயிரம் பணம் பெற்று, மாணவா்களுக்கு வழங்கி வந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், அங்கு சென்று சீனிவாஸ்ரெட்டியை கைது செய்து, பிரபல பல்கலைக்கழங்களின் பெயா்களிலான போலி மதிப்பெண் சான்றிதழ்களை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த மகாலட்சுமி லேஅவுட் போலீஸாா், சீனிவாஸ்ரெட்டியிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT