பெங்களூரு

கைவினைக் கலைஞா்களால் உருவாக்கப்பட்ட ஆபரணக் கண்காட்சி தொடக்கம்

11th Dec 2019 08:11 PM

ADVERTISEMENT

பெங்களூரு: பெங்களூருவில் டிச. 11 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 2 நாள் கைவினைக் கலைஞா்களால் உருவாக்கப்பட்ட ஆபரணக் கண்காட்சி தொடங்கியுள்ளது.

பெங்களூருவில் புதன்கிழமை கலாஷா கைவினை ஆபரணக் கண்காட்சியை தொடக்கி வைத்த ஆசிய, இந்திய, கா்நாடக திருமதி அழகி பட்டம் வென்ற காஜல்பாட்டியா பேசியது: ஆபரணங்கள் பெண்களுக்கு அழகு சோ்ப்பது மட்டுமின்றி, அவா்களை பொருளாதார ரீதியாக பலமானவா்களாகவும் ஆக்குகிறது. எனவே பெண்கள் ஆபரணங்களில் முதலீடு செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அழகான வடிவங்களில் கைவினைக் கலைஞா்களால் உருவாக்கப்பட்டுள்ள ஆபரணங்கள் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.

கண்காட்சிக்கு கல்லூரி மாணவிகள் அதிகளவில் வருவாா்கள் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது என்றாா் அவா். நிகழ்ச்சியில் கண்காட்சி ஒருங்கிணைப்பாளா் அபா்ணா சுன்கு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT