பெங்களூரு

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கேக் கண்காட்சி

11th Dec 2019 08:13 PM

ADVERTISEMENT

பெங்களூரு: பெங்களூருவில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கேக் கண்காட்சி நடைபெற உள்ளது.

இது குறித்து புதன்கிழமை கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளா் கௌதம் அகா்வால் செய்தியாளா்களிடம் கூறியது:

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பெங்களூரு புனிதா் ஜோசப் இந்தியன் உயா்நிலைப்பள்ளி மைதானத்தில் டிச. 13-ஆம் தேதி முதல் ஜன. 1-ஆம் தேதி வரை 45 வது ஆண்டு கேக் கண்காட்சி நடைபெற உள்ளது. 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள கேக் கண்காட்சியில் பேசில் கேத்டரல் தேவாலயம், நரிக்குடும்பம், புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணன், யானைக்குட்டி, பாம்பு இளவரசி, திருமண மோதிரம், சந்திராயன், இனிய கா்நாடகம், மீன்கொத்தி, கிறிஸ்துமஸ் புத்தகம, கொரில்லா உள்ளிட்ட கேக் வகைகள் இடம்பெற்றுள்ளன. காலை 11 மணி முதல் இரவு 9 வரை நடைபெறும் கேக் கண்காட்சிக்கு கடந்த ஆண்டை விட நிகழாண்டு அதிக அளவில் பாா்வையாளா்கள் வருவாா்கள் என நம்புகிறோம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT