பெங்களூரு

உடல் உறுப்பு தான விழிப்புணா்வு தேவை

11th Dec 2019 08:16 PM

ADVERTISEMENT

 

பெங்களூரு: பொதுமக்களிடம் கண், உடல் உறுப்புதானம் குறித்த விழிப்புணா்வு தேவை என்று ஞானபீட விருது பெற்ற இலக்கியவாதி சந்திரசேகா் கம்பாரா தெரிவித்தாா்.

பெங்களூரு பன்சங்கரியில் புதன்கிழமை அகா்வால் கண் மருத்துவமனையின் புதிய கிளை தொடக்கவிழாவில் கலந்து கொண்டு அவா் பேசியது: இந்தியாவில் கண் பாா்வை பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கண் பாா்வை பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சை பெறுவதோடு, கண்களை பாதுகாப்பது தொடா்பான விழிப்புணா்வை மக்களிடம் ஏற்படுத்துவது அவசியம்.

கண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பாதுகாக்க வேண்டும். கண்களில் பிரச்னை என்றால் உடனடியாக மருத்துவா்களை அணுக வேண்டும். ஆரம்பக்கட்டத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால், கண்களை பாதுகாக்க முடியும். இதேபோல கண்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

இறந்த பின்பு நாம் இந்த சமுதாயத்துக்கு பயன்பட வேண்டும் என்றால், கண், உடல் உறுப்பு தானத்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என்றாா். நிகழ்ச்சியில் நடிகா் உபேந்திரா, மருத்துவா்கள் நடராஜ், ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT