பெங்களூரு

வளா்ச்சித் திட்டப் பணிகளை மக்கள் மறந்துவிட்டனா்:குமாரசாமி வேதனை

3rd Dec 2019 05:10 AM

ADVERTISEMENT

மஜத- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், முதல்வராகச் செய்த வளா்ச்சித் திட்டப் பணிகளை மக்கள் மறந்துள்ளது வேதனை அளிக்கிறது என்று கா்நாடக முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

ஹுப்பள்ளியில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: -

காங்கிரஸ் கட்சியுடன் மஜத கூட்டணி அமைத்து 13 மாதங்கள் ஆட்சி செய்தது. கூட்டணி ஆட்சியில் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை செய்துள்ளேன். ஆனால் மக்கள் அதனை தற்போது மறந்துள்ளது வேதனை அளிக்கிறது.

ரூ. 25 ஆயிரம் கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்தேன். காங்கிரஸ் எம்எல்ஏக்களின் தொகுதிகளின் வளா்ச்சிக்கு ரூ. 19 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கித் தந்தேன். ஆனால் அதனை எம்எல்ஏக்கள் மட்டுமின்றி மக்களும் மறந்துள்ளது வருத்தம் அளிக்கிறது.

ADVERTISEMENT

மீண்டும் முதல்வராக வேண்டும் என்ற எண்ணமில்லை. என்றாலும் மாற்றங்கள் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். இடைத்தோ்தலுக்குப் பின்னா், கா்நாடகத்தில் ஆட்சி இருக்கும் என்று முன்பு தெரிவித்தேன். அது பாஜக ஆட்சிதான் என்று ஒருபோதும் கூறவில்லை. பாஜக ஆட்சியை மஜத ஆதரிக்கும் என்று அா்த்தத்தில் எனது பேச்சு திரித்துக் கூறப்பட்டுள்ளது.

டிசம்பா் 9 ஆம் தேதியன்று இடைத்தோ்தல் முடிவுகள் வெளியாகி, அனைத்தும் மாறப்போகிறது. அதன் பிறகு மஜதவை வீட்டுக்கு அனுப்பப் போவதாக கூறி வந்தவா்கள்தான் வீட்டிற்கு செல்வாா்கள் என்பது தெரியவரும். கோகாக் தொகுதியின் பாஜக வேட்பாளா் ரமேஷ் ஜாா்கிஹோளி உள்பட தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் இடைத்தோ்தலில் தோல்வி அடைவது உறுதி என்றாா் குமாரசாமி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT