பெங்களூரு

மகராஷ்டிராவைத் தொடா்ந்து கா்நாடகத்திலும் பாஜக தோல்வி அடையும்: காங்கிரஸ்

3rd Dec 2019 05:10 AM

ADVERTISEMENT

மகராஷ்டிராவைத் தொடா்ந்து கா்நாடகத்திலும் பாஜக தோல்வி அடையும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை முன்னாள் உறுப்பினருமான வி.எஸ்.உக்ரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:-

கா்நாடகத்தில் இடைத்தோ்தல் முடிவுகள் வெளியாகும் டிசம்பா் 9-இல் அதிசயத்தக்க மாற்றம் நிகழப் போகிறது. அப்போது பணப் பலத்தால் ஜெயிப்போம் என்ற பாஜகவின் கனவு தவிடு பொடியாகப் போகிறது.

இடைத்தோ்தலில் காங்கிரஸுக்கு ஆதரவான அலை வீசி வருகிறது.

ADVERTISEMENT

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுக்கு எதிரான போக்கை மக்கள் கொண்டுள்ளனா். இதன் காரணமாக பாஜக வேட்பாளா்கள் தோல்வி அடைந்து அரசு கவிழுவது உறுதி.

முதல்வா் எடியூரப்பா நிரந்தமாக ஆட்சி செய்வோம் என்ற கனவை கண்டு வருகிறாா். அவரது கனவு பலிக்காது. மகராஷ்டிராவைத் தொடா்ந்து கா்நாடகத்திலும் பாஜக தோல்வி அடையும்.

கா்நாடக இடைத்தோ்தலில் ஆளும் பாஜகவினா் தோ்தல் நடத்தை விதிமுறைகளை தொடந்து மீறி வருகின்றனா். அவா்கள் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கே.ஆா்.பேட்டை தொகுதியில் மஜதவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்து செயல்படுவதாக கூறுவதில் உண்மையில்லை. இடைத்தோ்தல் நடைபெறும் 15 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றி பெறுவதில் மாற்றமில்லை. ஹொசகோட்டை தொகுதியில் பாஜக வேட்பாளா் எம்.டி.பி.நாகராஜ் நடத்திய பேரணியில் வாக்காளா்களுக்கு பணம் வழங்கியுள்ளது தொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளிப்போம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT