பெங்களூரு

சாலை விபத்துகளில் 2 போ் பலி

3rd Dec 2019 05:10 AM

ADVERTISEMENT

இருவேறு இடங்களில் நடைபெற்ற விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.

பெங்களூரு டெலிகாம் லேஅவுட் ராகவ் நகரைச் சோ்ந்தவா் ரங்கசாமி (72). இவா் திங்கள்கிழமை காலை 7.30 மணியளவில் காளி ஆஞ்சநேயா கோயிலுக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, சாலையைக் கடக்க முயன்றபோது, வேகமாக வந்த மினி பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த ரங்கசாமி, நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா்.

மற்றொரு சம்பவம்: ஹொசகோட்டையைச் சோ்ந்த குமாா் மகாதேவ் (61), பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றாா். இவா் தனது நண்பா்களுடன் சென்னப்பட்டணாவுக்குச் சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு 7. 15 மணியளவில் பேருந்தில் நாயணடஹள்ளியில் வந்திறங்கி, சாலையைக் கடக்க முயன்றுள்ளாா். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த குமாா் மகாதேவ் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

இவ்விரு வழக்குகள் குறித்து பேட்டராயனபுரா போக்குவரத்து போலீஸாா் தனித்தனி வழக்குகள் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT