பெங்களூரு

அறிவியல் ஆசிரியா்களுக்கு பயிலரங்கம்

3rd Dec 2019 11:20 PM

ADVERTISEMENT

பெங்களூரில் டிச. 6-ஆம் தேதி அறிவியல் ஆசிரியா்களுக்கு பயிலரங்கம் நடக்கவிருக்கிறது.

இதுகுறித்து ஜவாஹா்லால் நேரு கோளரங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜவாஹா்லால் நேரு கோளரங்கத்தின் சாா்பில் பெங்களூரு, டி.சௌடையா தெருவில் அமைந்துள்ள கோளரங்கத்தில் டிச. 6-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 3.30 மணிவரை ஆண்டின் சூரிய கிராணம் குறித்து அறிதல் என்ற தலைப்பிலான பயிலரங்கம் நடக்கவிருக்கிறது.

இதில் பங்கேற்க ஆா்வமுள்ளோா் 080-22379725, 22266084 ஆகிய தொலைபேசிகளில் டிச. 5-ஆம் தேதிக்குள் தொடா்புகொண்டு முன்பதிவுசெய்யவேண்டும். முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற அடிப்படையில் 40 பேருக்கு மட்டுமே பயிலரங்கில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ஹழ்ஹப்ஹஹ்ஹ.ா்ழ்ஞ் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT