வெள்ளத்தில் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு கட்டணமின்றி சான்றிதழ்கள் அனைத்தும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக இடைநிலைக் கல்வி தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கல்வி தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசித்து வரும் மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள் சேதமடைந்திருந்தாலோ அல்லது அவற்றை இழந்திருந்தாலோ மீண்டும் வழங்க கர்நாடக இடைநிலைக் கல்வி தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
வாரியம் அளித்துள்ள எந்த வகையான கல்விச் சான்றிதழையும் பெறுவதற்கு மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் விண்ணப்பங்களை செலுத்தினால், பள்ளி நிர்வாகம் அல்லது பள்ளி முதல்வர் மதிப்பெண் பட்டியலை கேட்டால் அவற்றை உடனடியாக கட்டணமின்றி வழங்கப்படும்.
இதுதொடர்பாக மைசூரு, பெலகாவி, கலபுர்கி மண்டலங்களைச் சேர்ந்த பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.