பெங்களூரு

விநாயகர் சதுர்த்தி: மின் வாரியம் அறிவுரை

29th Aug 2019 08:54 AM

ADVERTISEMENT

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தெருக்களில் விநாயகர் சிலைகளை அமைப்போர் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பெங்களூரு மின் வழங்கல் நிறுவனம்(பெஸ்காம்) அறிவுறுத்தியுள்ளது.
 இதுகுறித்து பெங்களூரு மின்வழங்கல் நிறுவனம்(பெஸ்காம்) வெளியிட்ட செய்திக் குறிப்பு: கெளரிப் பண்டிகை மற்றும் விநாயகர் சதுர்த்தி கர்நாடகத்தில் செப்.1,2-ஆம் தேதிகளில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தெருக்களில் விநாயகர் சிலைகளை அமைத்து வழிபடும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
 விநாயகர் சதுர்த்தியை எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் கொண்டாட விநாயகர் சிலைகளை அமைப்போருக்கு சில பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பெங்களூரு மின்வழங்கல் நிறுவனம்(பெஸ்காம்) வழிகாட்டுதல்களை அனைவரும் தீவிரமாக கடைப்பிடிக்க கேட்டுக்கொள்கிறோம்.
 விநாயகர் சிலைகள் வைக்கப்படும் பந்தல்கள் உயர் அழுத்த, மிகு உயர் அழுத்த அல்லது இலகு அழுத்த மின் இணைப்புகளின் கீழே அமைக்கப்படவில்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். தற்காலிக மின் இணைப்பை பெறுவதற்கு பந்தல் அமைப்பதற்கான தடையில்லா சான்றிதழை பெங்களூரு மாநகராட்சி அல்லது உள்ளாட்சி அமைப்பு, காவல்துறை, தீயணைப்புத் துறையிடம் இருந்துபெற்று ஒப்படைக்க வேண்டும். 100 பேருக்கு மேல் திரண்டால், அதற்கு மின் ஆய்வகத்தின் முன் அனுமதியை பெறவேண்டியது அவசியமாகும். கொண்டாட்டங்களுக்காக அமைக்கப்படும் மின்விளக்குகள், ஒயர்கள் குறித்த விவரங்களை உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரரிடம் அளித்திருக்க வேண்டும்.
 உரிய கட்டணங்களை செலுத்தி தற்காலிக மின் இணைப்பை பெஸ்காமிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். முன்அனுமதி இல்லாமல் மின் இணைப்பை பெற்றுள்ளதாக தெரியவந்தால், தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT