பெங்களூரு

பெங்களூரு-பெலகாவி இடையே சிறப்பு ரயில் சேவை

28th Aug 2019 09:17 AM

ADVERTISEMENT

பெங்களூரிலிருந்து பெலகாவிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: விநாயகர் சதுர்த்தியையொட்டி, பெங்களூரிலிருந்து (யஷ்வந்தபூர்)பெலகாவிக்கு சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படுகிறது. ரயில் எண்-06581-பெங்களூரு(யஷ்வந்த்பூர்)-பெலகாவி சிறப்பு ரயில் ஆக. 30-ஆம் தேதி இரவு 11 மணிக்கு யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் ஆக. 31-ஆம் தேதி காலை 11.15 மணிக்கு பெலகாவி ரயில் நிலையத்தை சென்றடைகிறது. 
மறு மார்க்கத்தில், ரயில் எண்-06582-பெலகாவி-பெங்களூரு(யஷ்வந்த்பூர்)சிறப்பு ரயில் செப். 2-ஆம்தேதி இரவு 7 மணிக்கு பெலகாவி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் செப். 3-ஆம் தேதி காலை 6.20 மணிக்கு பெங்களூரு (யஷ்வந்தபூர்) ரயில் நிலையம் வந்தடைகிறது. இந்த ரயில் இருமார்க்கத்திலும் தும்கூரு, அரசிகெரே, பீரூர், தாவணகெரே, ஹரிஹரா, ஹாவேரி, ஹுப்பள்ளி, தாட்வாட், லோண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ரயிலில் இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட ஒரு பெட்டி, 2-ஆம் வகுப்பு படுக்கைவசதி கொண்ட 16 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு சரக்கு மற்றும் ஓய்வறை கொண்ட 2 பெட்டிகள் இடம் பெற்றிருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT