நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
கலபுர்கி மாவட்டம், சாவளகி கிராமம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதியது. இதில் காரிலிருந்த மகாராஷ்டிர மாநிலம், சோலாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய்குமார் (29), அவரது மனைவி ராணி (26), மகன்கள் ஸ்ரேயாஸ் (3), தீரஜ் (2), உறவினர் பாக்யஸ்ரீ (22) ஆகியோர் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த போலீஸார், 5 பேரின் சடங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். காயமடைந்த சிவராஜ், ஷீதல், பீமாசங்கர் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கலபுர்கி போக்குவரத்து போலீஸார் விசாரிக்கின்றனர்.