டிப்பர் லாரி மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரு சர்ஜாபுராவில் தங்கி, மென்பொறியாளராகப் பணியாற்றி வந்த அஞ்சனி யாதவ் (31). திங்கள்கிழமை நள்ளிரவு உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஸ்நேகா (28), துருவ் (2), சுப்ரு சந்தோஷ் (27), சந்தோஷ், சஞ்சீவ் ஆகியோருடன் காரில் வெளியே சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.
பெங்களூரு ஊரகம் அத்திப்பள்ளி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், சாலைத் தடுப்புச்சுவரில் மோதிவிட்டு, பின்னர் எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அஞ்சனி யாதவ், ஸ்நேகா, துருவ், சுப்ருசந்தோஷ் நிகழ்விடத்திலே உயிரிழந்தனர். காயமடைந்த சந்தோஷ், சஞ்சீவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சர்ஜாபுரா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.