கன மழையால் பாலக்காடு கோட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதையடுத்து, பெங்களூரு (யஷ்வந்தபுரம்) - மங்களூரு இடையே இயக்கப்படும் ரயில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கன மழையால் பாலக்காடு கோட்டத்தில் உள்ள படில்-குலசேகரா இடையே உள்ள ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை ரயில் எண்-16575-பெங்களூரு(யஷ்வந்தபுரம்)-மங்களூரு சந்திப்பு இடையிலான விரைவுரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.