ஆற்றில் குதித்து தாய், மகள் தற்கொலை செய்து கொண்டனர்.
மைசூரு மாவட்டத்துக்குள்பட்ட நஞ்சன்கூடு அருகேயுள்ள பண்டிபாளையா கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுளா (38). இவரது மகள் செளம்யா (19). இருவரும் சனிக்கிழமை கோயிலுக்குச் சென்று வருவதாகத் தெரிவித்து சென்றுள்ளனர். பின்னர் இருவரும் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில், ஹுல்லஹள்ளி அருகே உள்ள காவிரி ஆற்றில் குதித்து இருவரும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்று, ஆற்றில் தேடி, இருவரது சடலங்களை மீட்டுள்ளனர். இது குறித்து நஞ்சன்கூடு போலீஸார் விசாரிக்கின்றனர்.