பெங்களூரு

"சித்தராமையாவின் தொடர்பில் உமேஷ்கத்தி இல்லை'

23rd Aug 2019 08:47 AM

ADVERTISEMENT

முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் தொடர்பில் பாஜக எம்எல்ஏ உமேஷ்கத்தி இல்லை என்று அமைச்சர் லட்சுமண்சவதி தெரிவித்தார்.
 இதுகுறித்து பெலகாவியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் தொடர்பில் பாஜக எம்எல்ஏ உமேஷ்கத்தி இல்லை. அரசியலில் யாரும் எதிரிகள் இல்லை. சித்தராமையாவும், உமேஷ்கத்தியும் நண்பர்கள். அதன்காரணமாக இருவரும் தொலைபேசியில் பேசியிருக்கலாம். ஆனால், அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்திருப்பதால் சித்தராமையாவை உமேஷ்கத்தி சந்தித்தார் என்பதில் உண்மையில்லை. அடுத்த 3 ஆண்டுகளுக்கு முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு நல்லாட்சியை வழங்கும். பாஜக தலைவர்களிடையே அதிருப்தி எதுவுமில்லை என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT