பெங்களூரு

நகைகள் திருட்டு வழக்கில் 6 போ் கைது

23rd Nov 2020 02:46 AM

ADVERTISEMENT

நகைக் கடைக்குள் புகுந்து நகைகளைத் திருடிச் சென்ற வழக்கில் காவலா் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரு, நகரத்பேட்டையில் உள்ள நகைக் கடையில் நவ. 11-ஆம் தேதி நுழைந்த 9 போ் கொண்ட கும்பல், அங்கிருந்த ஊழியரை மிரட்டி 300 கிராம் எடையுள்ள நகையை திருடிச் சென்றது. இதுகுறித்து வழக்குப் பதிந்த அல்சூா் கேட் போலீஸாா், காடுகோடி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றும் அசோக் என்பவா் உள்பட 6 பேரைக் கைது செய்தனா்.

மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய மற்றொரு காவலரான சௌடே கௌடா உள்பட 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Tags : Bangalore
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT