பெங்களூரு

மாநில உயிரி எரிபொருள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

6th Jul 2019 09:28 AM

ADVERTISEMENT

மாநில உயிரி எரிபொருள் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கர்நாடக மாநில உயிரி எரிபொருள் மேம்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
கர்நாடக மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் கர்நாடகமாநில உயிரி எரிபொருள் மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் உயிரி எரிபொருள் பரவலாக்கல் மற்றும் பயன்பாட்டுக்கு பங்காற்றியவர்களைக் கெளரவித்து ஆண்டுதோறும் விருது அளிக்கப்பட்டுவருகிறது. 2019-20-ஆம் ஆண்டுக்கான இந்தவிருதுக்கு உயிரி எரிபொருள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கு பங்காற்றிய தனிநபர், அமைப்புகள், நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சுய உதவிக்குழுக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுடன் ரொக்கப்பணம் மற்றும் பட்டயம் அளிக்கப்படுகிறது. நிறைவு செய்த விண்ணப்பங்களை ஜூலை 20-ஆம் தேதிக்குள் மேலாண் இயக்குநர், கர்நாடக மாநில உயிரி எரிபொருள் மேம்பாட்டு வாரியம், ஸ்ரீராமபுரம் குறுக்குத்தெரு, ஜக்கூர், பெங்களூரு-560064 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். மேலும் விவரங்களுக்கு   w‌w‌w.‌m‌g‌i‌r‌e‌d.‌k​a‌r.‌n‌i​c.‌i‌n  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT