பெங்களூரு

கர்நாடக செங்குந்தர் சங்க செயலாளர் மறைவு

6th Jul 2019 09:23 AM

ADVERTISEMENT

கர்நாடக செங்குந்தர் சங்கத்தின் செயலாளர் டி.பரமசிவம் (83) உடல்நலக்குறைவு காரணமாக  காலமானார்.
பெங்களூரில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்(டிஆர்டிஓ)துணை அமைப்பான மின்னணுவியல் மற்றும் ரேடார் மேம்பாட்டு அமைப்பில் (உப்ங்ஸ்ரீற்ழ்ர்ய்ண்ஸ்ரீள் ஹய்க் தஹக்ஹழ் ஈங்ஸ்ங்ப்ர்ல்ம்ங்ய்ற் உள்ற்ஹக்ஷப்ண்ள்ட்ம்ங்ய்ற்) 25 ஆண்டுகளுக்கும் அதிகமாக விஞ்ஞானியாக பணியாற்றி 1994-ஆம் ஆண்டில் பணி ஓய்வுபெற்றார்.
பிறகு பெங்களூரு சதாசிவநகர், ஆர்.எம்.வி.விரிவாக்கத்தில் வசித்துவந்த டி.பரமசிவம்(83) உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு உயிரிழந்தார். அவருக்கு மனைவி சாந்தி, மகள் கவிதா உள்ளனர். 
பெங்களூரில் செயல்பட்டுவரும் கர்நாடக செங்குந்தர் சங்கத்தில் 1995-ஆம் ஆண்டு முதல் செயலாளராகப் பணியாற்றி வந்தார். கர்நாடகத்தில் செங்குந்தர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க பாடுபட்டார். பரமசிவத்தின் மறைவுக்கு கர்நாடக செங்குந்தர் சங்க நிர்வாகிகள் ஆர்.கந்தசாமி, வெங்கடேஷ், பிச்சாண்டி,சந்திரசேகர், ஆர்.எம்.பழனிசாமி, வடிவேலு, விஜயலட்சுமி மற்றும்  அவருடன் பணியாற்றிய விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். 
பின்னர், வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு ஹெப்பாளில் உள்ள அரசு மின்மயானத்தில் பரமசிவத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT