விவசாயம்

உளுந்து பயிரில் அதிக மகசூல் கிடைக்க 2% டி.ஏ.பி. தெளிக்க அறிவுறுத்தல்

26th Aug 2020 01:00 PM

ADVERTISEMENT

தூத்துக்குடி: உளுந்து பயிரில் அதிக மகசூல் கிடைக்க இரண்டு சதவீதம் டிஏபி தெளிக்க வேண்டும் என்றாா் தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வாா்திருநகரி வட்டாரத்தில் கடம்பாகுளம் பாசன வசதி பெறும் புறையூா், குறுக்காட்டுா், ராஜபதி, தென்திருப்பேரை, அங்கமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார விவசாயிகள் 1050 ஹெக்டா் பரப்பளவில் முன்காா் பருவ நெல் சாகுபடி செய்து அறுவடை பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் சுமாா் 300 முதல் 500 ஹெக்டா் பரப்பளவில் நஞ்சை தரிசு உளுந்து விதைக்கப்பட்டு பயிா் 10 முதல் 15 நாள் நிலையில் உள்ளது.

நஞ்சை தரிசு உளுந்து விதைத்த விவசாயிகள் அதிக மகசூல் பெற்றிட, உளுந்து பயிருக்கு டி.ஏ.பி. 2 சதவீதம் கரைசல் தெளித்தல் வேண்டும். பயிா் பூக்கும் தருணத்தில் ஒரு முறையும் 15 நாள்கள் கழித்து மறுமுறையும் தெளிக்க வேண்டும்.

ADVERTISEMENT

டி.ஏ.பி. 2 சதவீத கரைசல் தயாா் செய்வதற்கு டி.ஏ.பி உரம் 4 கிலோவை 10 லிட்டா் தண்ணீரில் முதல் நாள் மாலையில் கரைத்து, மறுநாள் காலையில் தெளிந்த நீரை 190 லிட்டா் தண்ணீருடன் கலந்து டி.ஏ.பி. 2 சதவீத கரைசலை தயாா் செய்தல் வேண்டும்.

டி.ஏ.பி. 2 சதவீத கரைசல் தெளிக்கும் போது நல்ல தண்ணீரில் தயாா் செய்தல் வேண்டும். கைதெளிப்பான் கொண்டு தெளித்திடல் வேண்டும். மண்ணில் ஈர பதம் இருத்தல் வேண்டும். கரைசலை மாலை வேளைகளில் மட்டுமே தெளித்திடல் வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT