2018 அதிபர் தேர்தலில் தலையீடு: ரஷியப் பெண் மீது குற்றச்சாட்டு பதிவு

அமெரிக்காவில் 2018-ஆம் ஆண்டு நவம்பர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் தலையீடு செய்தது தொடர்பாக முதல் முறையாக ரஷியப் பெண் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2018 அதிபர் தேர்தலில் தலையீடு: ரஷியப் பெண் மீது குற்றச்சாட்டு பதிவு

அமெரிக்காவில் 2018-ஆம் ஆண்டு நவம்பர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் தலையீடு செய்தது தொடர்பாக முதல் முறையாக ரஷியப் பெண் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 ரஷியாவைச் சேர்ந்தவர் எலீனா அலெக்ஸீவ்னா கஷ்யநோவா. இவர், நடப்பு 2018-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க தேர்தலில் வெளிநாட்டு நிதி உதவியை தவறாக பயன்படுத்தி, சமூக ஊடகங்கள் மூலம் பொதுமக்களின் கருத்துகளை திசை திருப்புவதாக குற்றம் சாட்டப்பட்டது.
 இதேபோன்ற உத்தியைத்தான் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலின் போதும் கடைபிடித்ததாக ரஷியா மீது ஏற்கெனவே குற்றச்சாட்டு உள்ளது.
 இந்த நிலையில்தான், தேர்தலில் தலையிட்டது தொடர்பாக ரஷியப் பெண் எலீனா மீது அமெரிக்க கிரிமினல் குற்றச்சாட்டை கூறி வழக்குப் பதிவு செய்துள்ளது.
 இதுகுறித்து அமெரிக்க நீதித் துறை வழக்கறிஞர்கள் கூறுகையில், குடியேற்றம் மற்றும் துப்பாக்கி கட்டுப்பாட்டு விவகாரங்களில் அமெரிக்க அரசியல் கட்சி வேட்பாளர்கள் மீது அவநம்பிக்கையை உண்டாக்கும் வகையில் ரஷிய சமூக ஊடகங்கள் மூலமாக எலீனா பொய் பிரசாரங்களை மேற்கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இதற்கு மறைமுகமான முறையில் அவர் வெளிநாடுகளிலிருந்து நிதி திரட்டியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 ரஷியா கண்டனம்: அமெரிக்க தேர்தலில் தலையிட்டது தொடர்பாக எலீனா மீது குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளதற்கு ரஷியா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. மேலும், இந்த குற்றச்சாட்டை ரஷியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
 இதுகுறித்து வெளியுறவுத் துறை இணை அமைச்சர் செர்கி ரியாப்கோவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷியா மீது மேலும் தடைகளை விதிப்பதற்கு அமெரிக்கா இன்னொரு ஒரு காரணத்தைத் தேடி கண்டுபிடித்துள்ளது. 2018 தேர்தலில் ரஷியா தலையீடு என்பது எப்போதும்போல் அமெரிக்காவின் ஜோடிக்கப்பட்ட மற்றுமொரு கதை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com