மஞ்சள் அங்கி போராட்டத்தை நாங்கள் தூண்டவில்லை: ரஷியா

பிரான்ஸில் அதிபர் இமானுவல் மேக்ரானுக்கு எதிராக நடைபெற்று வரும் மஞ்சள் அங்கி போராட்டத்தை தாங்கள் தூண்டிடுவதாகக்
மஞ்சள் அங்கி போராட்டம்
மஞ்சள் அங்கி போராட்டம்


பிரான்ஸில் அதிபர் இமானுவல் மேக்ரானுக்கு எதிராக நடைபெற்று வரும் மஞ்சள் அங்கி போராட்டத்தை தாங்கள் தூண்டிடுவதாகக் கூறப்படுவதை ரஷியா மறுத்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ரஷிய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் திங்கள்கிழமை கூறியதாவது:
பிரான்ஸில் நடைபெறும் போராட்டங்கள், முழுக்க முழுக்க அதன் உள்நாட்டு விவகாரம் ஆகும்.
பிற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் ரஷியா தலையிடுவது இல்லை; இனியும் தலையிடாது.
இந்த விவகாரத்தில் எங்களுக்கு எதிராக வெளியிடப்படும் தகவல்கள் எல்லாம் எங்கள் மீது சுமத்தப்படும் அவதூறுக் குற்றச்சாட்டுகள் ஆகும் என்றார் அவர்.
காற்று மாசைக் குறைத்து, பருவ நிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பெட்ரோல் மற்றும் டீசல்களுக்கான வரியை மேக்ரான் அரசு அதிகரித்து வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டில் கடந்த மாதம் 17-ஆம் தேதி முதல் தன்னெழுச்சிப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
எதிர்ப்பின் அடையாளமாக, ஒளிரும் மஞ்சள் மேலங்கியை அணிந்து கொண்டு பொதுமக்கள் நடத்தும் இந்தப் போராட்டம், மஞ்சள் அங்கி போராட்டம் என்றழைக்கப்படுகிறது.
வார இறுதி நாட்களில் நடைபெற்று வந்த இந்தப் போராட்டம், நான்காவது வாரமாக கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் தீவிரமடைந்தது . அப்போது தீவைப்பு போன்ற வன்முறைச் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றன. இதில், அதையடுத்து, நாடு முழுவதும் 1,700-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தப் போராட்டங்களை ரஷியா தூண்டி விட்டதாகக் குற்றம் சாட்டிய பிரிட்டனின் தி டைம்ஸ் இதழ், அது தொடர்பாக சில படங்களையும் வெளியிட்டது.
இந்தச் சூழலில், அதனை மறுக்கும் வகையில் ரஷிய அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com