பொன்மொழிகள்!

மற்றவர்களின் நன்மைக்காக வாழ்பவர்களே வாழ்பவர்கள்; மற்றவர்கள் நடைபிணத்துக்குச் சமமானவர்கள்.
பொன்மொழிகள்!

*  மற்றவர்களின் நன்மைக்காக வாழ்பவர்களே வாழ்பவர்கள்; மற்றவர்கள் நடைபிணத்துக்குச் சமமானவர்கள்.

*  பிறருக்குச் செய்யும் அற்ப சேவையும்கூட உங்களிடம் பேராற்றலை விழிப்படையச் செய்யும். - சுவாமி விவேகானந்தர்

*  ஒன்றாக இருந்த பிரம்மம் பலவாகப் பெருகியது; அண்டங்களாகவும் அனைத்து உயிர்களாகவும் மலர்ந்தது. எனவே, அனைத்திலும் அமர்ந்து உறைவது பிரம்மமேயாகும். அதுவே நம் உள்ளத்திலும் ஒளிர்கிறது. அதை நாம் "ஆத்மா' என்று சொல்கிறோம். - சாந்தோக்கிய உபநிடதம்   

*  இயற்கையின் இயக்கம் ஒவ்வொன்றுக்கும், மனிதனின் செயல்கள் ஒவ்வொன்றுக்கும் அடிப்படையாக பிரம்மசக்தியே இருக்கிறது. 

*  பிரம்மத்தைப் பற்றி நாவால் பேச இயலாது. ஏனென்றால் நாவைப் பேச வைப்பதே பிரம்மம்தான். - கேனோபநிடதம்

*  பரப்பிரம்மமே ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் என்ற பஞ்ச பூதங்களாக இருக்கிறது. -  பிரச்ன உபநிடதம்

*  ஆரம்பம், நடு, முடிவு ஆகியவை எதுவும் இல்லாதது பிரம்மம்.  - கைவல்ய உபநிடதம்

*  மரணம் நேர்ந்தாலும் சுயநலம் கருத வேண்டாம். சேவை செய்வதை மறக்க வேண்டாம்.

*  பிறர் நன்மைக்காக உழைப்பது மனதின் கோணல்களைத் திருத்துகிறது. - சுவாமி விவேகானந்தர்

*  பிரம்மம் எல்லாவற்றையும் காண்கிறது. அனைத்தையும் அறிகிறது.  - முண்டக உபநிடதம்

*  நம் அகத்தில் ஒளிரும் ஆன்ம ஒளியை, பரத்தில் நிலவும் பிரம்மத்தின் ஒளியோடு ஒன்றாக்க வேண்டும். - சுவேதாஸ்வதர உபநிடதம்

*  ஆத்மானந்தத்தில் திளைத்தவர்கள்  திளைப்பவர்கள் எதற்கும் அஞ்சுவதில்லை. - தைத்திரீய உபநிடதம்

*  அனைத்து மதத்தினரும் சகோதர பாசத்துடன் ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ வேண்டும். -  குருநானக்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com