நிகழ்வுகள்

திருப்போரூர்  - செங்கற்பட்டு சாலையில் உள்ள செம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பீடம் ஸ்ரீ பாலசமஸ்தான ஆலயத்தில் ஸ்ரீ சக்ர ராஜசபையில் அம்பிகை மூன்று வடிவில் குழந்தை, குமரி, தாயாக விஸ்வரூப மூலிகைத் 


ஸ்ரீ சாரதா நவராத்திரி ஏக கால லட்சார்ச்சனை!

திருப்போரூர்  - செங்கற்பட்டு சாலையில் உள்ள செம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பீடம் ஸ்ரீ பாலசமஸ்தான ஆலயத்தில் ஸ்ரீ சக்ர ராஜசபையில் அம்பிகை மூன்று வடிவில் குழந்தை, குமரி, தாயாக விஸ்வரூப மூலிகைத் திருமேனியில் அருள்பாலித்து வருகின்றாள். ஸ்ரீ சாரதா நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக ஆக்டோபர் 19 -விஜயதசமியன்று ஸ்ரீ பாலைக்கு ஏககால லட்சார்ச்சனை வைபவம் நடைபெறுகின்றது. அன்று மாலை ஒன்பது குழந்தைகளுக்கு ஸ்ரீ பாலா (குமாரி) பூஜை நடைபெறுகின்றது. 

தொடர்புக்கு: 97899 21151 /  94453 59228.


நவராத்திரி உத்ஸவம்

திருவாரூர் மாவட்டம் தப்பளாம்புலியூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு நித்ய கல்யாணி அம்பாள் ஆலயத்தில் நவராத்திரி உற்சவம் ஆக்டோபர் 10-இல் தொடங்கி அபிஷேகம் மற்றும் சகஸ்ரநாம பாராயண நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வருகின்றது. அக்டோபர் 18-இல் நிறைவு பெறுகின்றது. 

தொடர்புக்கு: 044 - 2431 1096.


நெய்க்குள தரிசனம்!

திருமீயச்சூர்  லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குளம் தரிசனம் (அக்டோபர் 19) நவராத்திரி காலத்தில் பிரசித்தி பெற்றது. விஜயதசமியன்று மூன்று மூட்டை அரிசியில் சர்க்கரைப்பொங்கல், புளிசாதம், தயிர்சாதம் போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நிதியின் முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளத்தில் படையலாகப் படைக்கப்படும். சர்க்கரைப் பொங்கலின் நடுவில் பள்ளம் அமைத்து, இரண்டரை டின் நெய் ஊற்றப்படும். தேவிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபங்கள் ஏற்றப்பட்டு திரை விலக்கப்படும் போது தேவியின் பிம்பம் சர்க்கரைப் பொங்கலில் உள்ள நெய்க்குளத்தில் தெளிவாகத் தெரிவதை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாது என்பது ஐதீகம். 

- குடந்தை ப. சரவணன் 


நவராத்திரி விழா

திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து 29 கி.மீ. தொலைவில் உள்ள வடக்கு செழியநல்லூர் கிராமத்திலுள்ள துர்க்காம்பிகை ஆலயத்தில் நவராத்திரி விழா அக்டோபர் 10 -இல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. முக்கிய விசேஷ நாள்கள்: அக்டோபர் 17- துர்க்காஷ்டமியன்று கன்யா பூஜை, சுவாஸினி பூஜை, அக்டோபர் 18- சரஸ்வதி பூஜை, அக்டோபர் 19- துர்க்கா சூக்த ஹோமம், வனதுர்க்கா மந்திர ஹோமம் நடைபெறும்.

தொடர்புக்கு: 87545 40171 / 97901 22493.


தாமிரவருணி புஷ்கரம்  திருவிழா-2018

144 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் மஹாபுஷ்கரம் இவ்வாண்டு, தாமிரவருணி புஷ்கரமாகக் கொண்டாடப்படுகிறது. திருநெல்வேலி, குறுக்குத்துறையில் 12.10.2018-ஆம் தேதியன்று ஸ்ரீ காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய சுவாமிகள், மடாதிபதிகள், ஆதீன கர்த்தர்கள் தலைமையில் புஷ்கர விழா துவங்கப்பட்டு, 23.10.2018 வரை நடைபெறுகின்றது. தினமும் சதுர்வேத பாராயணம், மஹா ருத்ர ஜபம், சண்டி பாராயணம், காம்யார்த்த ஹோமங்கள் நடைபெறும். மேலும், விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம், லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை, ருத்ர க்ரம அர்ச்சனைகள் நடைபெறும்.

தொடர்புக்கு: 98400 53289/  94442 79696.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com