பழமொழி நானூறு

இனமாகிய ஆண் குரங்குகள் தேன் கூடுகளைக் கிழிக்கும் ஓங்கிய கற்கள் சூழ்ந்திருக்கின்ற மலைநாட்டை உடையவனே! எத்துணைப் பலவேயாயினும்,
பழமொழி நானூறு

தினையளவு கிடைப்பதாயின் அன்றே கொள்க!
 எனைப்பலவே யாயினும் சேய்த்தாற் பெறலின்
 தினைத்துணையே யானும் அணிக்கோடல் நன்றே
 இனக்கலை தேன்கிழிக்கு மேகல்சூழ் வெற்ப!
 பனைப்பதித் துண்ணார் பழம். (பா-68)
 இனமாகிய ஆண் குரங்குகள் தேன் கூடுகளைக் கிழிக்கும் ஓங்கிய கற்கள் சூழ்ந்திருக்கின்ற மலைநாட்டை உடையவனே! எத்துணைப் பலவேயாயினும், நெடுநாள்களுக்குப் பின் பெறுதலைவிட, தினையளவிற்றாயினும் அணித்த நாள்களுக்குள் பெறுதல் நல்லது. பனம் பழத்தை நட்டுவைத்துப் பனை பழுத்தால் அப்பழத்தை உண்போம் என்றிருப்பார் யாருமில்லை யாதலான். (க-து) பயன் சிறியதேயாயினும் அணித்தே வருவதைக் கொள்க. "பனைப்பதித் துண்ணார் பழம்' என்பது பழமொழி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com