நாய்மேல் தவிசு

பொறிவண்டு பூமேல் இசை முரலும் ஊர புள்ளிகளையுடைய வண்டுகள் பூக்களின்மீது இருந்து இசைபாடும் மருதநிலத் தலைவனே!

பழமொழி நானூறு
பெரியார்க்குச் செய்யும் சிறப்பினைப் பேணிச்
 சிறியார்க்குச் செய்து விடுதல் - பொறிவண்டு
 பூமேல் இசைமுரலும் ஊர! அதுவன்றோ
 நாய்மேல் தவிசிடு மாறு. (பா-75)
 பொறிவண்டு பூமேல் இசை முரலும் ஊர புள்ளிகளையுடைய வண்டுகள் பூக்களின்மீது இருந்து இசைபாடும் மருதநிலத் தலைவனே! அறிவிற் பெரியார்க்குச் செய்யும் சிறப்பினை விரும்பி, அறிவிற் சிறியார்க்குச் செய்தல், அச்செயலன்றோ யானைமேல் இடவேண்டிய கல்லணையை, இழிந்த நாயின் மீது இட்டதை ஒக்கும்.
 (க-து.) பெரியோர்க்குச் செய்யும் சிறப்பினைச்சிறியோர்க்குச் செய்தலாகாது. "நாய்மேல் தவிசிடுமாறு' என்பது பழமொழி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com