நெகிழிச் சாலை!

நெதர்லாண்டைச் சேர்ந்த "சைமன் ஜோரிட்ஸ்மா' என்பவரும், "ஆனி கெளட்ஸ்டால்' என்பவரும் சேர்ந்து ஆராய்ச்சி செய்து பிளாஸ்டிக் ரோடை வடிவமைத்திருக்கிறார்கள்! ஆமாம்!
நெகிழிச் சாலை!

நெதர்லாண்டைச் சேர்ந்த "சைமன் ஜோரிட்ஸ்மா' என்பவரும், "ஆனி கெளட்ஸ்டால்' என்பவரும் சேர்ந்து ஆராய்ச்சி செய்து பிளாஸ்டிக் ரோடை வடிவமைத்திருக்கிறார்கள்! ஆமாம்! நெகிழிச் சாலையேதான்! சிமென்ட், அல்லது தார், அல்லது அஸ்ஃபால்ட்  இவை அனைத்தும் கருங்கல் துகள்களை இணைக்கும் பொருட்கள்.  இச்சாலைகள் மழையாலும், உடைந்து விட வாய்ப்பு உள்ளது. மேலும் புதிய சாலைகளை அமைக்கும் போது பெரும்பாலும் இவற்றை உடைப்பது கடினமாக இருக்கிறது. 

நெகிழிச் சாலை சாதாரணசாலையைவிட மூன்று பங்கு உழைக்கும்! .... நெகிழிச் சாலையின் உட்புறம் வெற்றிடம் இருப்பதால் அவை மழைநீருக்கு வடிகால்களாக இருக்கும்!  துண்டுதுண்டாக பலகைகள் போல் தயாரித்து ஒன்று சேர்த்து அமைத்து விடுவதால்...பழுதடைந்த இடத்தை எளிதில் மாற்றிவிடலாம்! நெகிழிப் பலகைகள் உள்ளே நல்ல வெற்றிடம் இருப்பதால் மின்சார கேபிள்கள், மற்றம்  
தண்ணீர்க் குழாய்களுக்காகத் தோண்டிக்கொண்டிருக்க வேண்டியதில்லை! லேசாக இருப்பதால் எளிதில் அடுக்கி எங்கு சாலை போடவேண்டுமோ அங்கு எடுத்துச் சென்று வேலையை முடிக்கலாம்! 

மழையினால் சாலை பழுதடையாது! சாலையில் மேடுபள்ளங்கள் இருக்காது. கேபிளோ, குழாய்களோ பழுதடைந்து விட்டால் தோண்ட வேண்டியதில்லை சாலையின் துண்டை அகற்றி விட்டு மீண்டும் பொருத்திவிடலாம்! நெகிழியை மறுசுழற்சி செய்யும் வாய்ப்பும் கிடைக்கிறது! 

நெகிழிச் சாலை மகிழ்ச்சி தருமா என்று போகப்போகத்தான் தெரியும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com